முகப்பு
தற்போதைய செய்திகள்

கல்வித்துறை அலுவலகத்துக்கு பூட்டு போடும் போராட்டம்: விடுதலைச் சிறுத்தைகள் 250 பேர் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் கல்வித்துறை அலுவலகத்துக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 250 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:49 AM
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் கல்வித்துறை அலுவலகத்துக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 250 பேர் கைது செய்யப்பட்டனர்.

தனியார் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்காக அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளின் தரத்தை என்.ஆர். காங்கிரஸ் அரசு சீரழித்து வருகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை முழுவதுமாக கைவிட வேண்டும், புதுச்சேரி மாநிலத்துக்கு என தனியாக கல்வி வாரியத்தை ஏற்படுத்த வேண்டும்.

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை நடப்பாண்டிலேயே கொண்டு வர வேண்டும், இதற்கான அரசாணையை வெளியிட வேண்டும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அவர்கள் விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இதற்காக அந்தந்த பள்ளிகளில் கூடுதல் கட்டட வசதி ஏற்படுத்த வேண்டும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் 50 சதவீத இடங்களை பெற வேண்டும்,மருத்துவக் கல்லூரிகளிடம் பெறபட்ட இடங்கள் குறித்த பட்டியலையும் வெளியிட வேண்டும்.உயர்கல்வி கட்டண கண்காணிப்பு ஆணையத்தை உடனே ஏற்படுத்த வேண்டும், கல்வி ஆண்டுத் தொடக்கத்திலேயே அனைத்து மாணவர்களுக்கும் சீருடைகள், புத்தகங்களை வழங்க வேண்டும்.

கிராமப்புற பள்ளிகளை சீரமைத்து, ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க வேண்டும்,தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கூடுதல் விடுதி வசதிகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கல்வித் துறை வளாகத்துக்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெற்றது. மாநில அமைப்புச் செயலாளர் சு.பாவாணன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். ப.அமுதவன் வரவேற்றார். தேவ.பொழிலன், அரிமாத்தமிழன், ப.இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில நிர்வாகிகள் அரசு.வணங்காமுடி, பொதினிவளவன், தமிழ்மாறன், மணிமாறன்,  உள்பட பலர் பேசினர். பின்னர் கல்வித்துறை நுழைவு வாயிலுக்கு பூட்டு போட்டு கோஷமிட்டனர். அதைத் தொடர்ந்து 100 அடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீஸôர் தலையிட்டு 250 பேரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.