தற்போதைய செய்திகள்

மருத்துவர் வீட்டில் 65 பவுன் நகை, ரூ.5 லட்சம் திருட்டு

வெளியூர் சென்ற மருத்துவரின் வீட்டில், 65 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் பணம் திருடு போனதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆ. நங்கையார் மணி

வெளியூர் சென்ற மருத்துவரின் வீட்டில், 65 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் பணம் திருடு போனதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் விவேகானந்தன் நகரைச் சேர்ந்தவர் ரெங்கராஜ். மருத்துவராக உள்ளார். இவரது மகள் சுந்தரா(42). பெண்களுக்கான ஆயத்த ஆடை விற்பனையகம் நடத்தி வருகிறார். மருத்துவ கல்லூரிக்கான கலந்தாய்வில் பங்கேற்பதற்காக, தனது மகள் சுருதி மற்றும் தந்தை ரொங்கராஜ் ஆகியோருடன் சுந்தரா, கடந்த 16ஆம் தேதி சென்னைக்கு சென்றுள்ளார். 10 நாள்கள் இடைவெளிக்கு பின், சனிக்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர்.

 வீட்டின் கதவை திறந்து கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் விசாரித்தபோது, வெளியூர் சென்றுவிட்டு 10 நாள்களுக்குப் பின் திரும்பி வருவதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என போலீஸார் கேள்வி எழுப்பியுள்ளனர். அவசரமாக புறப்பட்டுச் சென்றதால், மறந்துவிட்டதாக சுந்தரா தெரிவித்துள்ளார்.

போலீஸாரிடம் பேசிக் கொண்டே கதவை திறந்து உள்ளே சென்றபோது, வீட்டின் பின்பக்க கதவு திறந்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 65 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவையும் திருடு போனதை அறிந்த சுந்தரா மற்றும் ரெங்கராஜ் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

சம்பவ இடத்தில் போலீஸார் நின்றதால், உடனடியாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயவியல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ரெங்கராஜ் அளித்த புகாரின்பேரில், திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT