கே.ஐ.டி. பேராசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கான ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி முகாம் வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
தற்போதைய செய்திகள்கே.ஐ.டி. பேராசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கான ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி முகாம் வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கான ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி முகாம் வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
முதல்வர் மா.சுப்புராஜ், வரவேற்று பயிற்சியினைத் தொடங்கி வைத்தார். சென்னை, ஸ்மார்ட் பயிற்சி நிறுவனத்தின் பயிற்சியாளர் கமாண்ட்ர் கே.ரவி, பேராசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஒவ்வொரு ஆசிரியரும் தான் எதனால் ஒரு ஆசிரியர்?
ஒரு ஆசிரியராய் தனது பணி என்ன என்பதை சுய பரிசோதனைக்குட்படுத்த வேண்டும். கற்பித்தலின் நோக்கம் அறிந்து பாடங்களை நடத்த வேண்டும் என்றார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர் எஸ்.செந்தில் செய்திருந்தார்.