தனியார் பேருந்து மோதி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.11.78 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை
ராஜபாளையத்தில் விபத்தில் உயிரிழந்தவரின் வாரிசுதாரருக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.11,78,900 இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நீதிமன்றம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.
தற்போதைய செய்திகள்தனியார் பேருந்து மோதி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.11.78 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை
ராஜபாளையத்தில் விபத்தில் உயிரிழந்தவரின் வாரிசுதாரருக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.11,78,900 இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நீதிமன்றம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.
ராஜபாளையத்தில் விபத்தில் உயிரிழந்தவரின் வாரிசுதாரருக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.11,78,900 இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நீதிமன்றம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.
ராஜபாளையம்-செட்டியார்பட்டி, சங்கரலிங்காபுரம் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (48). இவர் மளிகைக்கடை மற்றும் சைக்கிள் கடை வைத்திருந்தார். 4.10.12-ம் தேதி சேத்தூர்-முகவூர் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது டிராக்டர் மோதியதில் மாரிமுத்து உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது மனைவி பாஞ்சாலி (45), பிள்ளைகள் முத்துக்கண்ணன் (25), முத்துமீனா (23) ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் ரூ.17 லட்சம் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோஷம், தேனி, ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் மாரிமுத்துவின் வாரிசுதாரருக்கு ரூ.11,78,900 இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்