விருதுநகரில் கொடி நாள் நிதி அதிகம் வசூலித்த அலுவலர்களுக்கு வெள்ளி பதக்கம்
விருதுநகர் மாவட்டத்தில் அதிகமாக படைவீரர் கொடி நாள் நிதியை வசூல் செய்த அலுவலர்களுக்கு....
விருதுநகர் மாவட்டத்தில் அதிகமாக படைவீரர் கொடி நாள் நிதியை வசூல் செய்த அலுவலர்களுக்கு வெள்ளிப்பதக்கம் மற்றும் தலைமைச் செயலாளரின் பாராட்டு நற்சான்றிதழ்களையும் ஆட்சியர் வே.ராஜாராமன் திங்கள்கிழமை வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம் சார்பில் கொடிநாள் நிதி வசூல் செய்ய ஒவ்வொரு துறை அதிகாரிகளுக்கும் குறிப்பிட்ட அளவு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட ரூ.1 லட்சத்திற்கும் கூடுதலாக குறிப்பிட்ட அதிகாரிகள் நிதி வசூல் செய்து கொடுத்தனர். அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன், தாட்கோ மேலாளர் எ.காளிமுத்து, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் என்.திலிப்குமார் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் பாராட்டி வெள்ளிப்பதக்கம் மற்றும் தலைமைச் செயலாளரின் பாராட்டு நற்சான்றிதழ்கள் ஆகியவைகளையும் ஆட்சியர் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.முனுசாமி, திட்ட அலுவலர் பிரபாகர், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜசேகரன், முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குநர் நாகராஜன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் கனகராஜ், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Advertisement