விராலிமலை அருகே கிணற்றில் மிதந்த இளம்பெண் சடலம், போலிஸார் விசாரணை
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே செவ்வாய்க்கிழமை தோட்டத்து கிணற்றில் மிதந்த இளம்பெண் சடலத்தால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே செவ்வாய்க்கிழமை தோட்டத்து கிணற்றில் மிதந்த இளம்பெண் சடலத்தால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்
விராலிமலை அருகேயுள்ள வானத்திராயன்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகம் இவரது மகள் கார்த்திகா(18) இவர் 5 வகுப்பு வரை படித்து விட்டு அப்பகுதிகளில் வயல்வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது, இந்நிலையில் திங்கள்கிழமை இரவிலிருந்து கார்த்திகாவை காணவில்லையாம், இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், பலஇடங்களில் கார்த்திகாவை தேடியும் கிடைக்காத நிலையில், செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்து கிணற்றில் கார்த்திகா சடலமாக மிதப்பதாக பெற்றோற்களுக்கும் விராலிமலை போலிஸாருக்கும் கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார், தீயணைப்பு துறையினரின் உதவியுடன் சடத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு இலுப்பூர் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து கார்திகாவின் தந்தை அளித்து புகாரின் பேரில் விராலிமலை காவல் ஆய்வாளர் அ. மா. செந்தில்மாறன் வழக்கு பதிந்து கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்