முகப்பு
தற்போதைய செய்திகள்

கடனுக்கான கூடுதல் வட்டி கேட்டு வீடு அபகரிப்பு: 4 பேர் மீது வழக்கு

அருப்புக்கோட்டை வேலாயுதபுரம் பள்ளிக்கூடத் தெருவில் வசிப்பவர் முருகபூபதி.இவரது மனைவி பூங்கொடி.தம்பதியர் இருவரும் அருப்புக்கோட்டை ராஜகோபால் என்பவரிடம் ரூபாய் 12 லட்சம் கடன்

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:52 AM
பகிர்:

அருப்புக்கோட்டை வேலாயுதபுரம் பள்ளிக்கூடத் தெருவில் வசிப்பவர் முருகபூபதி.இவரது மனைவி பூங்கொடி.தம்பதியர் இருவரும் அருப்புக்கோட்டை ராஜகோபால் என்பவரிடம் ரூபாய் 12 லட்சம் கடன் 30.8.2013ல் வாங்கினராம்.இத்தொகைக்கு அடமானமாக முருகபூபதி தனது வீடு மற்றும் காரை ராஜகோபாலிடம் அடமானம் வைத்தாராம்.தொடர்ந்து மாதாமாதம் முருகபூபதி வட்டி செலுத்தி வந்த நிலையில் கூடுதல் வட்டி வேண்டு மென வற்புறுத்தியதுடன் அடமானமாக வைத்த வீட்டையும் 1.9.2014 ல் ராஜகோபால் அருப்புக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து முருகபூபதியிடமிருந்து தனது பெயருக்கு எழுதி வாங்கிக்கொண்டாராம்.

இதனால் மனவருத்தமடைந்த முருகபூபதியின்  மனைவி பூங்கொடி மதுரை உயர்நீதி மன்றக்கிளையில் ராஜகோபால் மீது புகார் மனுச்செய்தார்.இதனடிப்படையில் விசாரித்து ராஜகோபால் மீது வழக்கு தொடர உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது.எனவே அருப்புக்கோட்டை நகர் காவல் ஆய்வாளர் முருகேசன் இதுதொடர்பாக ராஜகோபால் உள்பட மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த செல்வம்,கணேசன்,வாழவந்தான் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

முழு கட்டுரையைப் படிக்க →