பொறையாறு கல்லூரியில் நாணயவியல் கண்காட்சி
நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் இரண்டு நாள்கள் நடைபெறும் நாணயவியல் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.
நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் இரண்டு நாள்கள் நடைபெறும் நாணயவியல் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.
வரலாற்றுத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சியின் துவக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஜி.ஜோனாஸ் குணசேகரன் தலைமை வகித்தார். மூத்த பேராசிரியர் முனைவர் பி.ஜோதிபாக்கியம் கண்காட்சியை திறந்து வைத்தார்.
இக்கண்காட்சியில் நாகையைச் சேர்ந்த கேஏஎஸ்.முகம்மது சித்திக், தியாகராஜன் ஆகியோரால் சேகரிக்கப்பட்டுள்ள 135 நாடுகளின் ரூபாய் நோட்டுகள், பண்டைய கால, சோழர் கால நாணயங்கள், பல்வேறு நாடுகளின் வெள்ளி, தங்க நாணயங்கள், தபால் தலைகள், ஒருங்கிணைந்த பிரிட்டிஷ் காலனி நாடுகளிடையே செய்யப்பட்ட ஒப்பந்த பத்திரங்கள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
Advertisement
வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் இக்கண்காட்சியை சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களும் பார்வையிட்டனர்.
வரலாற்றுத்துறை தலைவர் ஆர்.சாமுவேல் சந்தோஷம், பேராசிரியர்கள் ஜூலியஸ் விஜயகுமார், செல்வராஜ் உள்ளிட்ட பலர் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.