முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மாநில அளவில் முதலிடம்

பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தடகளப்போட்டிகளில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:53 AM
பகிர்:

பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தடகளப்போட்டிகளில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் கடந்த பிப்ரவரி 25,26 மற்றும் 27ம் தேதிகளில் நடைபெற்றது.  இதில் தமிழகத்தில் இருந்து 11 மண்டலங்களை சேர்ந்த ஏராளமான பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பல்வேறு தடகளப் போட்டிகளில் பங்கேற்றனர்.  இதில் பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் மூன்றாம் ஆண்டு இயந்திரவியல் துறை மாணவர் பாலகுமாரும் பங்கேற்றார்.  இவர் 800 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்று இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றார்.  வெற்றி பெற்ற மாணவர் பாலகுமாருக்கு கல்லூரி வளாகத்தில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம், முதல்வர்(பொறுப்பு) கந்தசாமி, உடற்கல்வி இயக்குனர் சுதாகர் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள்  ஆகியோர் மாணவர் பாலகுமாரை பாராட்டினர். மேலும், இயந்திரவியல் துறை தலைவர் பத்மநாபன், சிறப்பு அலுவலர் தினகரன் ஆகியோர் மாணவரை பாலகுமாரை பாராட்டி ரூபாய் பத்தாயிரம் பணமுடிப்பு வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.