மோட்டார் சைக்கிள்-கார் விபத்து: கணவன்,மனைவி பலி
ஒட்டன்சத்திரம் சத்யாநகரை சேர்ந்தவர் கன்னியப்பன் மகன் வீரமணி(25). ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மலர்விழி(20). இவர்கள் இருவரும்
பழனி அருகே மோட்டார்சைக்கிளும், காரும் மோதிக்கொண்டதில் கணவன், மனைவி இருவரும் பரிதாபமாக பலியாகினர்.
ஒட்டன்சத்திரம் சத்யாநகரை சேர்ந்தவர் கன்னியப்பன் மகன் வீரமணி(25). ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மலர்விழி(20). இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் ஆவர். இந்நிலையில் வீரமணி பழைய மோட்டார் சைக்கிளை விலைக்கு வாங்கி ஞாயிற்றுக்கிழமை மனைவியுடன் பழனிக்கு சென்று விட்டு ஊர் திரும்பியுள்ளார். இருவரும் பழனியை அடுத்த விருப்பாட்சி மேடு வீரலப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனி நோக்கி வந்த காருடன் எதிர்பாரா விதமாக மோதியது. இதில் வீரமணி பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். மலர்விழி பலத்த காயங்களுடன் ஒட்டன்சத்திரத்துக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுகுறித்து சத்திரப்பட்டி போலீஸார் காரை ஓட்டி வந்த மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.