முகப்பு
தற்போதைய செய்திகள்

அரசு பேரூந்து மோதியதில் தொழிலாளி சாவு

விராலிமலை மதுரை சாலையில் திங்கட்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது அரசு பேரூந்து மோதிய விபத்தில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:54 AM
பகிர்:

விராலிமலை மதுரை சாலையில் திங்கட்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது அரசு பேரூந்து மோதிய விபத்தில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்

விராலிமலை அருகேயுள்ள கவரப்பட்டி பரவலையைச் சேர்ந்தவர் நல்லுச்சாமி மகன் அப்பாத்துரை(40) கிணறு வெட்டும் வேலை செய்து வரும் இவர், திங்கட்கிழமை (மார்ச், 9) விராலிமலை வந்த அவர் வாரசந்தையில் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வாங்கியுள்ளார், பின்னர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கையில், விராலிமலை மதுரை சாலை தெப்பகுளம் அருகே வந்த போது மதுரையிலிருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேரூந்து கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த அப்பாத்துரை மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்,

இதுகுறித்து விராலிமலை போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.