முகப்பு
தற்போதைய செய்திகள்

காரைக்கால் எல்.ஐ.சி. ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீடு அனுமதியை கண்டித்து காரைக்கால் எல்.ஐ.சி. கிளை ஊழியர்கள் திங்கள்கிழமை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:54 AM
பகிர்:

காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீடு அனுமதியை கண்டித்து காரைக்கால் எல்.ஐ.சி. கிளை ஊழியர்கள் திங்கள்கிழமை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில்  காரைக்கால் எல்.ஐ.சி. கிளையில் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் போக்கை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீடு அனுமதிக்கக்கூடாது. இன்சூரன்ஸ் துறையில் 49 சதவீதம் அன்னிய முதலீடு என்பது தேச விரோதச் செயலாகும். இப்பிரச்னையில் பாஜக அரசு பாராளுமன்ற மரபுகளை மீறி செயல்படுகிறது. இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆதரவாக செயல்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது. இந்திய மக்களுக்கு எதிரான இப்போக்குகளை மத்திய அரசு கைவிடவேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தவேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் பேசினர். ஆர்ப்பாட்டத்திக்கு ஊழியர் சங்க தலைவர் கலியமூர்த்தி தலைமை வகித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →