முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை: கல்வி கடன் கோரி வாயில் கறுப்புத்துணி கட்டி வந்த தம்பதி

வங்கியில் கல்வி கடன் வழங்கவில்லை என புகார் தெரிவித்து இளம் காதல் தம்பதியினர் வாயில் கருப்புத்துணி கட்டியவாறு கைக்குழந்தையுடன் திங்கள்கிழமை திருநெல்வேலியில் நடைபெற்ற

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:54 AM
பகிர்:

வங்கியில் கல்வி கடன் வழங்கவில்லை என புகார் தெரிவித்து இளம் காதல் தம்பதியினர் வாயில் கருப்புத்துணி கட்டியவாறு கைக்குழந்தையுடன் திங்கள்கிழமை திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர்.

சங்கரன்கோவில் வட்டம், கீழத்திருவேட்டநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஆர். அமுதா. இதே பகுதியை சேர்ந்தவர் ஆர். முருகன். இருவரும் காதலித்து கலப்புத் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அமுதா, பி.எட் படிக்க தனியார் கல்வியல் கல்லூரிக்கு விண்ணப்பம் செய்தாராம். முருகன் கூலிவேலை செய்து வருவதால், கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் வங்கியில் கல்விக் கடன் பெற அமுதா விண்ணப்பம் செய்துள்ளார்.

பாம்புசந்தைகோயில் வங்கி கிளையில் கல்வி கடன் கேட்டு விண்ணப்பித்து ஒரு வருடமாகியும் வழங்கவில்லையாம். பி.எட் தேர்வில் 77.1 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றும், கல்விக் கடன் கிடைக்காமல் படிப்பை தொடர முடியாத நிலையில் பாதிக்கப்பட்டுள்ள அமுதா, தனது கணவர் முருகன் மற்றும் குழந்தையுடன் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் புகார் மனு அளிக்க வந்தார்.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற வாசகங்கள் எழுதிய அட்டையை கையில் ஏந்தியவாறு இருவரும் வாயில் கறுப்புத்துணி கட்டியவாறு கோரிக்கை மனு அளித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →