முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாக வி.பாலசுந்தரகுமார் பொறுப்பேற்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் செயல்பட்டு வரும் விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாக ஓய்வு பெற்ற

தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாக வி.பாலசுந்தரகுமார் பொறுப்பேற்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் செயல்பட்டு வரும் விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாக ஓய்வு பெற்ற

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:54 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் செயல்பட்டு வரும் விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாக ஓய்வு பெற்ற மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வி.பாலசுந்தரகுமார் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் விருதுநகர் விரைவு நீதிமன்ற நீதிபதி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். பின்னர் திண்டுக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக பதவி வகித்து ஓய்வு பெற்றார்.

இவர் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டார். இவரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றங்களின் நீதிபதிகள், வழக்குரைஞர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்: இந்த நீதிமன்றத்தில் பொருட்களின் தரக் குறைவு குறித்த வழக்குகள், சேவை குறைபாடு குறித்த வழக்குகள் உள்ளிட்டவற்றிற்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு விரைந்து தீர்ப்புகள் வழங்கப்படும் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →