ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன்கோவில் பூக்குழி உற்சவம் தொடக்கம்
விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய திருவிழாவில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு பெரிய மாரியம்மன்கோவில் பூக்குழி
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன்கோவில் பூக்குழி உற்சவம் தொடக்கம்
விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய திருவிழாவில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு பெரிய மாரியம்மன்கோவில் பூக்குழி
விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய திருவிழாவில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு பெரிய மாரியம்மன்கோவில் பூக்குழி உற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி (தீ மிதித்தல்) இம் மாதம் 20-ம் தேதி நடைபெறுகிறது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து தீ மிதிப்பார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர், புறவழிச்சாலையில் அமைந்துள்ள பெரிய மாரிம்மன்கோவில் வெகு பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் அமாவாசையன்று சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து மாநிலம் முழுமையும் இருந்து வந்து தீ மிதிப்பார்கள்.
இந்த ஆண்டு பங்குனி மாத பூக்குழி உற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அனுக்ஞை பூஜை, காப்பு கட்டுதலைத் தொடர்ந்து கொடிப்பட்டம் தெருக்கள் வழியே கொண்டுவரப்பட்டு சன்னதியை அடைந்தது. அங்கு தலைமை அர்ச்சகர் ஹரிஹரன் கொடிமரத்தில் கொடியேற்றினார். விழாவில் கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் வி.பி.எம்.சங்கர், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
13 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் அம்மன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் புறப்பாடு ஆகிய வீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதித்தல் 12-ம் திருநாளான 20-ம் தேதி (வெள்ளிக்கிழமை) பகல் 1.35 மணிக்கு நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ராமராஜா செய்துள்ளார்.