விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்க அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் புதன்கிழமை மாலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுப்புக்காளை வேலை அறிக்கையினை சமர்பித்தார். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் தியாகராஜன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் வைரமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாவட்ட துணைத் தலைவர்கள் ராமமூர்த்தி, செல்வராஜ், கருப்பையா, ராஜமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்குழு கூட்டத்தில் மார்ச்-14ம் தேதி நடைபெற இருக்கிற மாவட்ட அளவிலான வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டில் அனைத்து சத்துணவு ஊழியர்களும் தவறாமல் பங்கேற்கவும், அதைத் தொடர்ந்து 21,22 ஆகிய நாள்களில் மாவட்டம் முழுவதிலும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் மாநில செயலாளர் அய்யம்மாள் நிறைவுரையாற்றினார். நிறைவாக மாவட்ட பொருளாளர் பாத்திமாமேரி நன்றி கூறினார். இதில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.