முகப்பு
தற்போதைய செய்திகள்

இலுப்பூர் பகுதியில் பிடிபட்ட ஆஸ்திரேலிய ஆந்தை

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அபூர்வ ஆஸ்திரேலிய ஆந்தை வியாழக்கிழமை பிடிபட்ட செய்தி பரவியதால் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வேடிக்கை பார்த்து ரசித்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:55 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அபூர்வ ஆஸ்திரேலிய ஆந்தை வியாழக்கிழமை பிடிபட்ட செய்தி பரவியதால் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வேடிக்கை பார்த்து ரசித்தனர்.

இலுப்பூர் ஆலத்தூர் சாலையில் தேனீர் கடை நடத்தி வருபவர் நாகராஜன், இவர் வியாழக்கிழமை கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது கடையின் கூரை மீது ஏதோ விழும் சத்தம் கேட்டதை தொடர்ந்து, வெளியே வந்து பார்த்ததில் அபூர்வமான ஆஸ்திரேலிய ஆந்தை ஒன்று கூரை மீது இருந்துள்ளது, அதனை சுற்றி காகம் கூட்டமாக நின்று கரைந்து கொண்டிருந்ததை கண்ட நாகராஜன் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து, வனகாப்பாளர் கண்ணுச்சாமி சம்பஇடத்துக்கு வந்து ஆஸ்திரேலிய ஆந்தையை பிடித்து நார்த்தாமலை காப்பு காட்டில் உள்ள ஆலமரபகுதியில் விட்டார். அபூர்வ ஆந்தை பிடிபட்ட செய்தி பரவியதால், பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வேடிக்கை பார்த்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.