முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனி அருகே பெண்கள் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மீது பாலியல் புகார்

பழனியை அடுத்த கீரனூரில் கீரனூர் பேரூராட்சி அலுவலகம் அருகேயுள்ள தெருவில் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெண்கள் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.  இதில்

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:55 AM
பகிர்:

பழனி அருகே பெண்கள் தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

பழனியை அடுத்த கீரனூரில் கீரனூர் பேரூராட்சி அலுவலகம் அருகேயுள்ள தெருவில் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெண்கள் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.  இதில் நூற்றுப்பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.  இங்கு தலைமையாசிரியராக செல்வராஜ் என்பவரும், ஆசிரியர்கள் நான்கு பேரும் பணியாற்றி வருகின்றனர்.  தவிர சத்துணவு பணியாளர்களும் வேலை செய்து வருகின்றனர். இப்பள்ளியில்  கீரனூர் உமர்பாரூக் தெருவை சேர்ந்த தம்பதியர ஷாஜஹான்(40) என்பவரது மகள் ஷர்மிளா(10)(பெயர் மாற்றம்)  பயின்று வருகிறார்.  இவர் கடந்த இரு தினங்களாக பள்ளிக்கு செல்லமறுத்து வீட்டிலேயே இருந்துள்ளார்.  அப்போது பெற்றோர் விசாரித்த போது தலைமையாசிரியர் செல்வராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை ஷாஜஹான் வியாழக்கிழமை உறவினர்களுடன் கீரனூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.  புகாரை பெற்றுக் கொண்ட போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.