தற்போதைய செய்திகள்

புதிய தமிழகம் பிரமுகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தூத்துக்குடி மாவட்டம்,  ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த மாதம் புதிய தமிழகம் கட்சியின் நகரச் செயலர் பாஸ்கரன் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

தி. இன்பராஜ்

தூத்துக்குடி மாவட்டம்,  ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த மாதம் புதிய தமிழகம் கட்சியின் நகரச் செயலர் பாஸ்கரன் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து  ஸ்ரீவைகுண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், திடீரென வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில்,  ஸ்ரீவைகுண்டத்துக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்ற சிபிசிஐடி போலீஸார் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (41) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 20-க்கும் மேற்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

புதிய தமிழகம் நகரச் செயலர் பாஸ்கரன் கொலை வழக்கில் சுரேஷுக்கு முக்கியத் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரை கைது செய்யப்பட்டிருப்பதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT