முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனி மலைக்கோயிலில் ஊட்டியை சேர்ந்த அதிமுகவினர் சிறப்பு பிரார்த்தனை

பழனி மலைக்கோயிலில் ஊட்டியை சேர்ந்த அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை அலகுகுத்தி, தங்கத்தேர் இழுத்து நேர்ச்சை செலுத்தினர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:58 AM
பகிர்:

பழனி மலைக்கோயிலில் ஊட்டியை சேர்ந்த அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை அலகுகுத்தி, தங்கத்தேர் இழுத்து நேர்ச்சை செலுத்தினர்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக வேண்டி ஊட்டியை சேர்ந்த அதிமுகவினர் 221 பேர் 221 கி.மீ பாதயாத்திரையாக காவடி சுமந்து பழனி வந்தனர். கடந்த ஏழு நாட்களுக்கு முன்பு ஊட்டி மஞ்சூர் அன்னமலை முருகன் கோயிலில் பாதயாத்திரை துவங்கிய அவர்கள் செவ்வாய்க்கிழமை பழனி வந்தடைந்தனர். பழனி மலைக்கோயிலுக்கு வந்த அவர்களில் மூன்று பேர் சுமார் 20அடி நீள அலகு குத்தி ஜெயலலிதாவுக்காக நேர்ச்சை செலுத்தினர்.  பின்னர் மலைக்கோயிலில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அர்ச்சனைகள் செய்தனர். 

நிகழ்ச்சிக்கு ஊட்டி எம்எல்ஏ., புத்திசந்திரன் தலைமை வகித்து ஏற்பாடுகள் செய்திருந்தார்.  மேட்டுப்பாளையம் எம்எல்ஏ., ஓகே சின்ராஜ், ஊட்டி ஒன்றியகுழு தலைவர் சாந்தி ஜோகி, பழனி எம்எல்ஏ., வேணுகோபாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து தங்கத்தேர் புறப்பாடும் செய்தனர். 

மேலும்,  அதிமுக பொதுச்செயலாளரும், மக்களின் முதல்வருமான செல்வி ஜெ ஜெயலலிதா மீண்டும் அரியணை ஏற வேண்டி கடலூர் மேற்கு மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் பேரூராட்சி கவுன்சிலரும், அம்மா ஸ்போர்ட்ஸ் கிளப் மாநில தலைவருமா ஜம்புலிங்கம் தலைமையில் ஏராளமான கட்சியினர் மலைக்கோயிலில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தங்கத்தேர் புறப்பாடு செய்தனர்.  நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.