விருதுநகர் அரசு மருத்துவமனையில் டயாலிஸிஸ் கருவி: ரூ.25 லட்சம் ஒதுக்கீடு
விருதுநகர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.25 லட்சத்தில் டயாலிஸிஸ் கருவி அமைக்கப்பட
விருதுநகர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.25 லட்சத்தில் டயாலிஸிஸ் கருவி அமைக்கப்பட இருப்பதாக மருத்தும் மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குநர் கதிரேசன் தெரிவித்தார்.
விருதுநகர் அரசு தலைமை அரசு மருத்துவமனையில் சிறுநீரக பிரிவில் டயாலிஸிஸ் கருவி இல்லாத நிலையில் செயல்பட்டு வந்தது. அதனால், சிறு நீரகம் செயலிழந்தால், ரத்தத்தை சுத்தகரிப்பு செய்வதற்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு வந்தனர். இதனால், சிறுநீரகம் செயலிழந்தவர்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். அதனால் இம்மாவட்டத்தைச் சேர்நத பொதுமக்கள் டயாலிஸிஸ் கருவி பொறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் தொடர்ந்து அரசுக்கு கோரி்ககை விடுத்து வந்தனர்.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு மருத்துவ கழகம் சார்பில் டயாலிஸிஸ் கருவி பொறுத்துவதற்காக ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது, நோய் கண்டறியும் மையத்தில் மேல் பகுதியில் அறை ஒதுக்கி அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் சிறுநீரகம் சுத்தகரிப்பு கருவிகள் விரைவில் பொறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இப்பிரிவுக்கு ஒரு மருத்துவர் மற்றும் 3 செவிலியர் ஆகியோருக்கு பயிற்சி கொடுத்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தும் வகையில் பல்வேறு சிகிச்சை பிரிவுகளுக்கான கட்டட பணிகளும் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
Advertisement