முகப்பு
தற்போதைய செய்திகள்

சங்கரன்கோவில் அருகே தம்பதி அடித்துக் கொலை:மைத்துனர் கைது

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே சனிக்கிழமை இரவு குடும்பத் தகராறில் தம்பதி அடித்துக் கொலை செய்த பெண்ணின் சகோதரரை போலீஸார் கைது செய்தனர். 

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:59 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே சனிக்கிழமை இரவு குடும்பத் தகராறில் தம்பதி அடித்துக் கொலை செய்த பெண்ணின் சகோதரரை போலீஸார் கைது செய்தனர். 

திருவேங்கடம் அருகே மைப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்சாமி மகன் ஜெயராமன் (65). இவரது மனைவி தனலெட்சுமி (55). தனலட்சுமியின் சகோதரர் அதேபகுதியை சேர்ந்த முத்தாலராஜ் (48). இவரது  முத்தாலராஜ் மகள் சிவரஞ்சனி. இவர் சென்னையில் காவலராக பணி செய்து வருகிறார்.

ஜெயராமன் மகன் கண்ணன். கூலித் தொழிலாளி. சிவரஞ்சனியும், கண்ணனும் காதலித்து வருகின்றனராம். சிவரஞ்சனி தனது முறை மாமன் கண்ணன் மீதுள்ள அன்பினால் தனது சம்பளத்தில் இருந்து மாதந்தோறும் பாதியை அனுப்பி வருகிறாராம்.

திருமணத்திற்கு முன்பே தனது மகள், சகோதரி மகனுக்கு பணம் அனுப்புவதால் ஆத்திரமடைந்த முத்தாலராஜ் தனது மகளை கண்டித்துள்ளார். 

இதனிடையே சனிக்கிழமை இரவு தனது சகோதரி தனலெட்சுமிக்கு வீட்டுக்குச் சென்ற முத்தாலராஜ், ஜெயராமனிடம் தகராறு செய்தாராம். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அங்கிருந்த கம்பால் ஜெயராமனை முத்தாலராஜ் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனை தடுத்த தனலெட்சுமியையும் கம்பால் முத்தாலராஜ் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கணவனும், மனைவியும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

திருவேங்கடம் போலீஸார் வழக்குப் பதிந்து முத்தாலராஜை கைது செய்தனர்

முழு கட்டுரையைப் படிக்க →