முகப்பு
தற்போதைய செய்திகள்

அரசு பேரூந்து மோதி அடிபட்ட வாலிபருக்கு முதலுதவியளித்து உயிரை காப்பாற்றிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

இலுப்பூர் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசு பேரூந்து மோதிய விபத்தில் அடிபட்டு சாலையோரம் கிடந்த வாலிபருக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் முதலுதவியளித்து, மேல்

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:12 AM
பகிர்:

இலுப்பூர் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசு பேரூந்து மோதிய விபத்தில் அடிபட்டு சாலையோரம் கிடந்த வாலிபருக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் முதலுதவியளித்து, மேல் சிகிச்சைக்காக தனது பாதுகாப்பு வாகனம் மூலம் புதுகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்சிக்கு சென்று விட்டு  ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில்  விராலிமலை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட இலுப்பூர்  வெள்ளை மரியால் ஆலயத்திற்கு வழிபாடுக்கு சென்றுகொன்டிருந்தார். அப்போது மேட்டுச்சாலை எனும் இடத்தில் இலுப்பூரில் இருந்து புதுக்கோட்டை சென்ற அரசு பேருந்து மோதி சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் மயங்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வாலிபரைக் கண்டதும் தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார். பின்னர் வாலிபர் அருகே சென்று மருத்துவரான அமைச்சர் தனது வாகனத்தில் இருந்த முதலுதவி பெட்டியில் இருந்த மருத்துகள் மூலம் முதலுதவி அளித்தார். பின்னர்  தனக்கு பாதுகாப்பிற்காக வந்த வாகனத்தில்  வாலிபரை ஏற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தார். அந்த வாலிபர் யாரென்று விசரித்ததில் காரையூர் அருகே உள்ள நெறிஞ்சிக்குடியினைச் சேர்ந்த  அடைக்கலம் மகன் குமரேசன்(30) என்று தெரிந்ததும், அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்து பின்னர் மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறி மருத்துவ உதவிக்கு ரூ 5000 வழங்கினார். அமைச்சரின் இந்த செயலைக்கண்ட பொதுமக்கள்  மரணத்தின் விழிம்பில் இருந்த வாலிபரைக் காப்பாற்றிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.