முகப்பு
தற்போதைய செய்திகள்

இலுப்பூரில் இருசக்கர வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் வெல்டிங் தொழிலாளி சாவு

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனம் சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் வெல்டிங் தொழிலாளி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:00 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனம் சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் வெல்டிங் தொழிலாளி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

விராலிமலை அருகே உள்ள பாலப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி(எ)ஆறுமுகம்(29), இவர் விராலிமலை தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மலேசியாவில் இருந்து வந்த தனது சகலையை (மனைவியின் தங்கை வீட்டுகாரர்)தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு அன்னவாசல் அருகே உள்ள கடம்பராயன்பட்டியில் விட்டுவிட்டு பின்னர் இருசக்கர வாகனத்தில் பாலப்பட்டி திரும்பும் வழியில், இலுப்பூர் தென்னலூர் சாலையில் உள்ள வெள்ளைமரியால் ஆலயம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோர புளியமரத்தில் மோதியது, இதில் தலையில் பலத்த காயமடைந்த பெரியசாமி(எ)ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து இலுப்பூர் காவல் ஆய்வாளர் எஸ். வேலுச்சாமி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.