மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம்: திமுகவினர் வெளி நடப்பு
மதுரை மாநகராட்சியில் இன்று காலை பட்ஜெட் கூட்டம் தொடங்கியது. அப்போது அமளியில் ஈடுபட்ட திமுகவினர் பட்ஜெட் அறிக்கையை கிழித்து விட்டு வெளியேறினர்.
Updated On : 9 ஜனவரி, 2024 at 10:30 AM
மதுரை மாநகராட்சியில் இன்று காலை பட்ஜெட் கூட்டம் தொடங்கியது. அப்போது அமளியில் ஈடுபட்ட திமுகவினர் பட்ஜெட் அறிக்கையை கிழித்து விட்டு வெளியேறினர்.
மதுரை மாநகராட்சியில் திமுக உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்தனர். பட்ஜெட் அறிக்கையை வாசிக்க விடாமல் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் தண்னீர் பாட்டல்களை வீசி எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது அதிமுக கவுன்சிலர் ஜெயலட்சுமி மீது தண்னீர் பாட்டல் பட்டது.