முகப்பு
தற்போதைய செய்திகள்

தாய் மொழியை மாணவர்கள் மறக்கக் கூடாது: தலைமை குற்றவியல் நீதிபதி

மாணவர்கள் எந்த சூழ்நிலையிலும் தாய் மொழியை மறக்கக் கூடாது என்று விருதுநகர் மாவட்ட தலைமை குற்றிவியல் நீதிபதி ஜான் ஆர்.டி.சநதோஷம் கூறினார்.

தற்போதைய செய்திகள்

தாய் மொழியை மாணவர்கள் மறக்கக் கூடாது: தலைமை குற்றவியல் நீதிபதி

மாணவர்கள் எந்த சூழ்நிலையிலும் தாய் மொழியை மறக்கக் கூடாது என்று விருதுநகர் மாவட்ட தலைமை குற்றிவியல் நீதிபதி ஜான் ஆர்.டி.சநதோஷம் கூறினார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:02 AM
பகிர்:

மாணவர்கள் எந்த சூழ்நிலையிலும் தாய் மொழியை மறக்கக் கூடாது என்று விருதுநகர் மாவட்ட தலைமை குற்றிவியல் நீதிபதி ஜான் ஆர்.டி.சநதோஷம் கூறினார்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் 64-வது ஆண்டு விழா மாவட்ட வருவாய் அலுவலர் செ.முனுசாமி தலைமையில் நடைபெற்றது.விழாவிற்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கோ.சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார். ஆசிரியை ச.பொன்மலர் வரவேற்றார். தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவில் மாவட்ட தலைமை குற்றிவியல் நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோஷம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

மாணவர்கள் தினமும் செய்தித்தாள் படிக்கும் வழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். கடின உழைப்பே அதிர்ஷ்டத்தின் தாய் என்று கூறுவார்கள். கடினமாக உழைத்தால் உயர்வு உண்டு. மாணவர்கள் எந்த சூழ்நிலையிலும் தாய் மொழியை மறக்கக் கூடாது. தாய், தந்தை மற்றும் கல்வி அறிவு தரும் ஆசிரியர்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். தாய் நாட்டை மறக்கக் கூடாது. சமுதாயத்தில் மற்றவர்களுக்கு இடையூறு செய்யக் கூடாது. இது போன்ற ஒரு குக்கிராமத்தில் மாநிலத்திலே எங்கும் இல்லாத அளவில் பிரமாண்டமான ஆண்டு விழாவை அர்ப்பணிப்பு உணர்வோடு ஆசிரியர்கள் செய்துள்ளார்கள். தன்னலமற்ற ஆசிரியர்களின் சேவைகள் வளர வாழ்த்துகிறேன் என்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் செ.முனுசாமி பேசுகையில், நான் ஒரு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் தொடக்கக் கல்வியை கிராமத்தில் கற்றேன். இதுபோன்று என்னை  ஊக்குவிக்க அப்போது யாரும் இல்லை. இந்தப் பகுதி மக்களின் முன்னேற்றத்திற்கு ஆசிரியர்கள் செய்துள்ள சேவை அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. மாணவர்கள் அனைத்து பன்முகத் திறன்களையும் பெற, அரசை எதிர்பார்க்காமல் ஆசிரியர்கள் தங்களது சொந்தப் பணத்தில் யோகா, கராத்தே உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர் கொடுத்து வைத்தவர்கள் என்றார் அவர்.

விழாவில் கல்வி உள்ளிட்ட பல்வேறு கலைகளில் பள்ளியில் சிறந்து விளங்கும் 5-ம் வகுப்பு மாணவிகள் ம.இசக்கிராணி, அ.அமலா, 8-ம் வகுப்பு மாணவர் ஆ.சதீஸ்குமார் ஆகியோருக்கு சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கப்பட்டது. மேலும் முதல் வகுப்பு முதல் கல்வி மற்றும் விளையாட்டில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மாவட்ட யோகா பயிற்சியாளர் அழகுமுருகனின் மேற்பார்வையில் மாணவர்கள் கண்ணாடி டம்ளர் மீது அமர்ந்தும், தக்காளிப்பழம் உடையாமல் அதன் மீது அமர்ந்தும் யோகாசனம் செய்தார்கள்.மாநில கராத்தே தலைமைப் பயிற்சியாளர் சென்சாய் எம்.செபஸ்தியான் தலைமையில் மாணவ, மாணவியர் ஓடுகளை உடைத்து பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நடத்தினர்.மாணவிகள் அ.அமலா, ம.இசக்கிராணி ஆகியோர் மாணவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுபவர்கள் பெற்றோரே, ஆசிரியர்களே என்ற தலைப்பில் சொற்போர் நடத்தினர். இவர்களின் திறமையைப் பாராட்டி சிறப்பு விருந்தினர்கள் ரொக்கப் பரிசு அளித்தனர்.

விழாவில் சிவகாசி குழந்தைகள் நல மருத்துவர் ஏ.ராமநாதன், அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் கோமதிசங்கர் ஜி.குருசாமி, மாவட்ட அரசுப் பணியாளர் சங்கத் தலைவர் ஆ.காமராஜ், உதவித் திட்ட அலுவலர் கே.நல்லதம்பி, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் செ.பாலமுருகன், லூ.ஜான் சேவியர்ராஜ், மேற்பார்வையாளர் ச.மாடசாமி, கிராம கல்விக் குழு தலைவி அ.சீத்தாலட்சுமி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவி அ.கனியம்மாள், வார்டு உறுப்பினர் இ.முனியாண்டி, ஆசிரியர் செ.சண்முகநாதன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.மாணவ மாணவியரின் பல்வேறு வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியை வே.ராஜேஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆங்கில பட்டதாரி ஆசிரியை பா.பாத்திமா ஞானம் நன்றி கூறினார். விழாவில் ஏராளமான கிராம மக்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →