தற்போதைய செய்திகள்

காங்கிரஸிலிருந்து என்னைப் பிரிக்கமுடியாது: கே.வி.தங்கபாலு பேச்சால் பரபரப்பு

காங்கிரஸிலிருந்து என்னை யாராலும் பிரிக்கமுடியாது என முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி.தங்கபாலு கூறினார்.

ஜெயப்பாண்டி

காங்கிரஸிலிருந்து என்னை யாராலும் பிரிக்கமுடியாது என முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி.தங்கபாலு கூறினார்.

மதுரையில் ஐ.என்.டி.யூ.சி. சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியதாவது:

ஐ.என்.டி.யூ.சியின் தலைவராக ஜவாஹர்லால் நேரு உள்ளிட்டோர் இருந்துள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோது ஐ.என்.டி.யூ. தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது தொழிற்சங்கத்தினரை சரியாக பயன்படுத்துகிறோமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

தொழிற்சங்கத்தின் காங்கிரஸ் கொடியை முன்னிலைப்படுத்துவது பாராட்டுக்குரியது. என்னை காங்கிரஸிலிருந்து யாராலும் பிரிக்கமுடியாது. உயிருள்ளவரை அக்கட்சியிலே இருப்பேன். அதுபோலவே தொழிற்சங்கத்தினரும் செயல்படவேண்டும்.காங்கிரஸ் வாழ்ந்தால் நாடும் வாழும். அனைத்துத் தரப்பினரையும் இணைத்துச் செயல்படும் கட்சியாக காங்கிரஸ் உள்ளது என்றார்.

சலசலப்பு:

காங்கிரஸிலிருந்து தம்மை யாராலும் பிரிக்கமுடியாது என தங்கபாலு பேசியது கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, கட்சி மீது தொண்டர்கள் வைத்திருக்கும் அன்பை விளக்கும் வகையில் கூறினேன் என்று மழுப்பியபடி சென்றார். சமீபகாலமாக தமிழக காங்கிரஸில் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் தனித்தனியாக செயல்பட்டுவருகின்றனர். இந்நிலையில் தங்கபாலுவின் பேச்சு கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT