முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் நந்தனார் மடத்தில் உள்ள சிவன்சிலையிலிருந்து நீர் வடிகிறது: பக்தர்கள் ஆச்சர்யம்

சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில் உள்ள சிவலோகநாதர் சிலையின் பீடத்திலிருந்து தினமும் நீர்வடிவதால், பக்தர்கள் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:04 AM
பகிர்:

சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில் உள்ள சிவலோகநாதர் சிலையின் பீடத்திலிருந்து தினமும் நீர்வடிவதால், பக்தர்கள் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.

சிதம்பரம் ஓமக்குளம் பகுதியில் சுவாமி சகஜானந்தாவால் நந்தனார் மடம் மற்றும் கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலில் சுவாமி சிவலோகநாதர், செனந்தரநாயகி அம்மன் மற்றும் ஸ்ரீநந்தனார் ஆகியோர் வீற்றுள்ளனர். இக்கோயிலை காந்தியடிகள் அடிக்கல் நாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கோயில் நிர்வாகியாக சுவாமி சகஜானந்தாவின் தம்பி பேரன் டி.ஜெயச்சந்திரன் உள்ளார். கோயில் கட்டப்பட்டு 75 ஆண்டுகளுக்கு மேலாகிறது.

இக்கோயிலில் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி, பணியை ராஜிநாமாக செய்துவிட்டு ஊதியம் இன்றி பூசாரியாக இருந்து நாக.குழந்தைவேலு என்பவர் கடந்த பல வருடங்களாக பூஜை செய்து வருகிறார். இவர் கடந்த வியாழக்கிழமை பூஜை செய்யும்போது சிவலோகநாதர் சிலை பீடத்திலிருந்து நீர்கசிவது தெரிந்தது. நீர்நின்று விடும் என நினைத்து அதன் மேல் தினமும் துணியை போட்டு வைத்தும், தினமும் நீர் கசிந்து வருவதை கண்டு ஆச்சரியமுற்றார். தற்போது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணி நடைபெறும் வேளையில் சுவாமி பீடத்திலிருந்து நீர்கசியும் செய்தி அறிந்த அப்பகுதி மக்கள் ஆச்சிரயத்துடன் சிவன்சிலையிலிருந்து நீர்கசிவை ஆச்சரியத்துடன் பார்த்து தரிசித்து செல்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.