தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் தானிய சாகுபடியை அதிகரிக்கும் வகையில்  சிறு குறு விவசாயிகளுக்கு பயிற்சி

விருதுநகர் மாவட்டப் பகுதி கிராமங்களில் தானிய பயிர்  சாகுபடியை அதிகரிக்கவும், மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரித்தல் தொடர்பாகவும் சிறு தானிய மகளிர் குழுக்களுக்கு வேளாண்மைத்துறை மூலம்

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டப் பகுதி கிராமங்களில் தானிய பயிர்  சாகுபடியை அதிகரிக்கவும், மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரித்தல் தொடர்பாகவும் சிறு தானிய மகளிர் குழுக்களுக்கு வேளாண்மைத்துறை மூலம் பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக வேளாண்மை துறை இணை இயக்குநர் தெரிவித்தார்.

இம்மாவட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் தானிய பயிரிடுவதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இதுபோன்ற காரணங்களால் இப்பகுதியில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய வரகு, பணிவரகு, கேழ்வரகு மற்றும் தினை உள்ளிட்ட பயிர்களை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கையில் வேளாண்மைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். முதல் கட்டமாக வேளாண்மை வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் ஒவ்வொரு கிராமங்களிலும் விவசாய குழுக்கள் அமைத்து முழுமையான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், ஒவ்வொரு விவசாயிக்கும் எந்தெந்த வகையான தானியங்களை பயிரிட்டால் அதிக மகசூல் பெறலாம் என்பது தொடர்பாக சிறு குறுவிவசாயிகளுக்கு நீர்வள நிலவளத்திட்டம் சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதேபோல், தானியங்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பது தொடர்பாகவும் சிறுதானிய மகளிர் குழுக்கள் தொடங்கி பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் வரகு, பணிவரகு, கேழ்வரகு மற்றும் தினை ஆகிய தானியங்களை பிரித்தெடுத்து  மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பது என்பதும், சந்தைப்படுத்தும் முறை குறித்தும் விளக்கமாக எடுத்துரைக்கப்படுகிறது. அவ்வகையில் இம்மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் தொடங்கப்பட்டுள்ள சிறுதானிய மகளிர் குழுக்களுக்கு தலா 1 நவீன இயந்திரமும், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்கு மட்டும் 2 நவீன இயந்திரமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் விதை சுத்தகரிப்பு செய்தல், இயற்கை உரங்கள் தயார் செய்தல், தானியங்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரித்தல் போன்றவைகளில் கூடுதல் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. சிறுதானிய மகளிர் குழுக்களும் வேலையில்லாத காலங்களிலும் தானியம் சார்ந்த தொழில்கள் செய்து மகளிர் குழுவினரும் குடும்பத்திற்கான வருவாயை ஈட்டும் வகையில் இத்தி்டடம் மூலம் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக வேளாண்மை துறை இணை இயக்குநர் கே.சுப்பையா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.590 கோடி மோசடி: ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் பங்குகள் 20% சரிவு!

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மீண்டும் விண்ணப்பிக்கலாம்!

ஹெட்மேயர், ரோவ்மன் பௌவல் அதிரடி: ஜிம்பாப்வேவுக்கு 255 ரன்கள் இலக்கு!

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

SCROLL FOR NEXT