தற்போதைய செய்திகள்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இருட்டறை உதவியாளர் பணிக்கு பரிந்துரை

சென்னை மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிப்புச் செய்யப்பட்டுள்ள இருட்டறை உதவியாளர் பணிக்காலியிடத்திற்கு தகுதியானவர்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு

எஸ். பாண்டியன்

சென்னை மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிப்புச் செய்யப்பட்டுள்ள இருட்டறை உதவியாளர் பணிக்காலியிடத்திற்கு தகுதியானவர்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட இருக்கின்றனர்.

இது குறித்து விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இப்பணியிடத்திற்கு அரசால் அங்கிகாரம் பெற்ற நிறுவனங்களில் இருட்டறை உதவியாளர்(Dark room Assitant) பயிற்சி முடித்திருக்க வேண்டும். இதில் எஸ்.சி, எஸ்.சி.எ, எஸ்.டி ஆகிய பிரிவினருக்கு 35 வயதுக்குள்ளும், எம்.பி.சி, பி.சி, பி.சி.எம் ஆகிய பிரிவினருக்கு 32 வயதிற்குள்ளும், இதர பிரிவினருக்கு 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

பதிவு மூப்பு: முன்னுரிமை பிரிவினருக்கு(அனைத்து முன்னுரிமை பிரிவினருக்கும்) நாளது தேதி வரையிலும், முன்னுரிமையற்றோர் பிரிவினருக்கு(அனைத்து முன்னுரிமையற்ற பிரிவினருக்கும்)-15.6.2013 வரையிலும்  இருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பதிவு மூப்பிற்கு உள்பட்ட பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து அசல் கல்விச்சான்றிதழ்கள் மற்றும் குடும்ப அட்டை ஆகியவைகளுடன் வருகிற 6-ம் தேதி சூலக்கரை தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து பரிந்துரை செய்யப்படும் விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல், குறிப்பிட்ட நாளுக்கு பின் வருகிறவர்களின் கோரி்க்கைகள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும் employmentexchange.tn.gov.in என்ற இணையதளத்தில் MSRB List-ல் பரிந்துரை செய்யப்பட்டோர் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

SCROLL FOR NEXT