முகப்பு
தற்போதைய செய்திகள்

விராலிமலையில் உடலில் தீவைத்துக்கொண்டு பெண் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வலிப்பு நோய் காரணமாக மனமுடைந்த நிலையில் இருந்த பெண், திங்கள்கிழமை (மே, 4) மண்ணெண்ணை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்ட விபத்தில் மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:26 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வலிப்பு நோய் காரணமாக மனமுடைந்த நிலையில் இருந்த பெண், திங்கள்கிழமை (மே, 4) மண்ணெண்ணை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்ட விபத்தில் மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.

விராலிமலை தெற்குதெருவைச் சேர்ந்தவர் ராமன் மனைவி ஆனந்தி(43) இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் ஆனந்தி இருந்து வந்துள்ளார். இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டில் இருந்த மண்ணெண்ணை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளார்.

அலரல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஆனந்தியை மீட்டு திருச்சி அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை காவல் உதவி ஆய்வாளர் ந. புகழேந்தி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.