தற்போதைய செய்திகள்

கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை கணவர் குடும்பத்தார் மீது மனைவி புகார்

விருதுநகர் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வருவதாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கணவர் குடும்பத்தார் 6 பேர் மீது

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வருவதாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கணவர் குடும்பத்தார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர்-வடமலைக்குறிச்சி சாலையில் உள்ள கலைஞர் நகரைச் சேர்ந்தவர் ஜெகதீஷ்(35). அதே பகுதியைச் சேர்ந்த பொன்செல்வி(28) என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது, 28 சவரன் நகை மற்றும் சீர்வரிசை பொருள்கள் ஆகியவை வழங்கப்பட்டதாம். திருமணம் முடிந்து கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் நகையை சரிபார்ப்பதற்காக ஜெகதீஷ் வாங்கிச் சென்றுள்ளார். எடை பார்த்து விட்டு வந்து 3 சவரன் நகை குறைவாக கூறியும், நகையையும் திருப்பித் தராமல், மேலும் கூடுதலாக நகை வாங்கி வர வலியுறுத்தி   மனைவியை சித்ரவதை செய்து வீட்டை வீட்டு வெளியேற்றியுள்ளனர். இதற்கு மாமியார் உள்ளிட்ட உறவினர்களும் உடந்தையாக இருந்தார்களாம். இதனால் மன அமைதியை இழந்த பொன்செல்வி விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செவ்வாய்கிழமை புகார் செய்தார். அதன் அடிப்படையில் கணவர் ஜெகதீஷ், மாமியார் முத்தம்மாள், குணசுந்தரி, குணா, அனுசுயா, சுதாகர் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

SCROLL FOR NEXT