தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் 2 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் 2 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு எட்டு நோய்களுக்கான தடுப்பூசி போடும் முகாம் இரண்டாம் கட்டமாக வருகிற 7-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 13-ம் தேதி

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் 2 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு எட்டு நோய்களுக்கான தடுப்பூசி போடும் முகாம் இரண்டாம் கட்டமாக வருகிற 7-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 13-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.

இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய சுகாதார துறையின் சார்பில் 2 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு முழுமையாக தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ஜன்னி, இளம்பிள்ளைவாதம், தட்டம்மை, மஞ்சள் காமலை, மூளைக்காய்ச்சல் மற்றும் காசநோய் ஆகியவைகளை தடுப்பதற்காக போடப்படும் தடுப்பூசி ஆகும்.

இதில் கட்டுமான பணி நடைபெறும் இடங்கள், செங்கள் சூளைகளில் பணிபுரிகின்றவர்கள், நாடோடிகள், அகதிகள், தொழில் நிமித்தமாக அடிக்கடி இடத்தை மாற்றிக் கொள்கிறவர்கள் ஆகியோரின் குழந்தைகளுக்கு தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி முழுமையாக போடாதவர்கள் இருக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பான கணக்கெடுப்பு அந்தந்த பகுதி அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் நடத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்திரதனுஷ் திட்டத்தில் முதல் கட்டமாக 618 குழந்தைகளுக்கும், 42 கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது. அதேபோல், இரண்டாம் கட்டமாக இம்முகாம், அந்தந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடிகள் உள்ளிட்ட இடங்களில் நடைபெற இருக்கிறது. அதனால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் 2 வயதுக்குள்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு, மேற்குறிப்பிட்ட நோய்களில் இருந்து பாதுகாத்துக்  கொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

SCROLL FOR NEXT