முகப்பு
தற்போதைய செய்திகள்

ஊராட்சி ஒன்றியப் பள்ளி மாணவர்களுக்கு இலவச தையல், வர்ணம் பூசுதல் பயிற்சி தொடக்க விழா

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ மாணவியர் கோடைகாலத்தை பயனுள்ள வகையில்

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:27 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ மாணவியர் கோடைகாலத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்காக இலவச யோகா, கராத்தே, தையல் மற்றும் ஓவியம்-வர்ணம் பூசுதல் பயிற்சி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா கோல்டு சங்கத்தின் பட்டயத் தலைவர் என்.எஸ்.வேலாயுதம் தலைமை தாங்கினார். ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ் வரவேற்றார்.

மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் மாதா அமிர்தானந்தமாயி மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் கல்வி நிறுவனம் இந்தப் பயிற்சியை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குகிறது.

மக்கள் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் இ.விஜயலட்சுமி பயிற்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இப் பள்ளி மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இப் பயிற்சியில் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார் அவர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா கோல்டு சங்கத்தின் பட்டயத் தலைவர் என்.எஸ்.வேலாயுதம் பேசுகையில்: இந்த அரசுப் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர் ஒருவர், கோடை விடுமுறையிலும் தவறாமல் பள்ளிக்கு வந்து, இப் பள்ளி ஏழை மாணவர்களின் முன்னேற்றத்திற்காக இப் பயிற்சியை முன்னின்று நடத்துகிறார் என்றால் இது கல்வித் துறைக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது என்றார்.
மக்கள் கல்வி நிறுவனத்தின் திட்ட அலுவலர் எஸ்.கிருஷ்ணசாமி வாழ்த்துரை வழங்கினார்.

மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்த அனைத்து நாட்களும் யோகா, கராத்தே, எம்ப்ராய்டு, தையல், ஓவியம், வர்ணம் பூசுதல் ஆகிய பயிற்சிகளை பயிற்சியாளர்கள் ராஜேஸ்வரி, கலைச்செல்வன், அழகுமுருகன், செபஸ்தியான் ஆகியோர் அளிக்கிறார்கள்.  விழாவில் பள்ளி கிராம கல்விக் குழுத் தலைவி அ.சீத்தாலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →