தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் பாராட்டு

விருதுநகர் மாவட்ட அளவில் பிளஸ்2 தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் வியாழக்கிழமை

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்ட அளவில் பிளஸ்2 தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் வியாழக்கிழமை பாராட்டினார்கள். 

தமிழகம் முழுவதும் பிளஸ்2 தேர்வு முடிகள் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இணைய தளங்களிலும், அந்தந்த பள்ளி வளாகங்களில் உள்ள தகவல் பலகையிலும் தலைமையாசிரியர்களால் வெளியிடப்பட்டது. விருதுநகர் மாவட்ட அளவிலும் ஒவ்வொரு பள்ளியிலும் வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

இதில், விருதுநகர் வருவாய் மாவட்ட அளவிலும், கல்வி மாவட்ட அளவிலும் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளின் விவரம் வருமாறு. விருதுநகர் கேவிஎஸ் மெட்ரிக்மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆர்.குருசங்கர், சிவகாசி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த எஸ்.செல்வசுவாஸ்திகா ஆகியோர் 1185 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், விருதுநககர் பி.சி.சிதம்பரநாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.ஜனனி 1182 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த கேவிஎஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த டி.ஆகாஷ் 1180 மதிப்பெண்கள் எடுத்து 3-ம் இடமும் பெற்றுள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டம்: ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்ட அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் சின்மயா வித்யாலயா பிஎசிஆர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த எம்.பிரபுவைரவேல் 1174 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், அதே ஊரைச் சேர்ந்த ஸ்ரீலயன்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆர்.அருண் 1170 மதி்ப்பெண்களும் பெற்று 2ம் இடமும், சின்மயா வித்யாலயா பிஎசிஆர் மெட்ரி்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த எஸ்.சரவணகணேஷ், அதே பள்ளியைச் சேர்ந்த ஆர்.கிருபாலினி ஆகியோர் 1168 மதிப்பெண்கள் எடுத்து 3-ம் இடமும் பெற்றனர்.

அருப்புக்கோட்டை கல்வி மாவட்டம்: பெரியவள்ளிக்குளம் நோபிள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த எம்.தினேஷ் 1178 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த பி.அருண்குமார் 1176 மதி்ப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், சாத்தூர் கேசிஎடி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த கிருபாசுதன் 1175 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பெற்றுள்ளனர். இதில் மாவட்டம் மற்றும் கல்வி மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு ஆட்சியர்  வே.ராஜாராமன் பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார், மாவட்ட கல்வி அலுவலர்கள், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

SCROLL FOR NEXT