கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நாளை 1300 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கும் விழா
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 75 நிறுவனங்கள் நடத்திய வளாக நேர்காணலில் தேர்வு பெற்ற 1300 பேருக்கு பணி நியமன உத்தரவு
தற்போதைய செய்திகள்கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நாளை 1300 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கும் விழா
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 75 நிறுவனங்கள் நடத்திய வளாக நேர்காணலில் தேர்வு பெற்ற 1300 பேருக்கு பணி நியமன உத்தரவு
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 75 நிறுவனங்கள் நடத்திய வளாக நேர்காணலில் தேர்வு பெற்ற 1300 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கும் விழா 10-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பகல் 2 மணிக்கு பல்கலைக்கழகத்தில் வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெறுகிறது.
துணை வேந்தர் எஸ்.சரவணசங்கர் வரவேற்கிறார். பதிவாளர் வெ.வாசுதேவன் வாழ்த்துரை வழங்குகிறார்.
75 நிறுவனங்கள் மூலம் பணி நியமனம் பெற்றுள்ள கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவ மாணவியர் 1300 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை, டி.சி.எஸ். தலைவர் பட்டாபிராமன் கிருஷ்ணசாமி, நாஸ்காம் தலைவர் வி.உதயசங்கர் ஆகியோர் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழகத்தின் டீன் வெளிநாட்டு உறவு எஸ்.ராதாகிருஷ்ணன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி அலுவலர் அலாவுதீன் ஆகியோர் செய்துள்ளனர்.