விருதுநகர் பகுதியில் இடி மின்னனுடன் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி
விருதுநகர் பகுதியில் பகல் முழுவதும் கடும் வெய்யில் அடித்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இடி மின்னலுடன் பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதில் சாத்தூரில் பகுதியில் 65 மி.மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.
விருதுநகர் பகுதியில் பகல் முழுவதும் கடும் வெய்யில் அடித்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இடி மின்னலுடன் பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதில் சாத்தூரில் பகுதியில் 65 மி.மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.
விருதுநகர் பகுதியில் கடும் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் வெக்கையாக இருந்த காரணத்தால் பொதுமக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. அதேபோல், நீர் ஆதாரம் குறைவாக இருந்த காரணத்தால் போதுமான குடிநீர் கிடைக்காத நிலையும் ஏற்பட்டது. இதுபோன்ற காரணங்களால் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை 5.30 மணி வரையில் கடும் வெய்யில் வாட்டி வதைத்தது. அதையடுத்து கருமேகம் சூழ்ந்து இடி மின்னல், சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. அதிலும் மழைக்கு இடையே இடி மின்னல் அதிகமாக இருந்ததால் மக்கள் நடமாட்டம் சாலையில் இல்லாமல் இருந்தது. இதனால் நகராட்சியில் முக்கிய தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது.
இம்மழையால் விருதுநகர் மாவட்ட வட்டார பகுதிகள் மற்றும் எரிச்சநத்தம், ஆமத்தூர், இனாம்ரெட்டியபட்டி, செங்குன்றாபுரம், எல்லிங்கநாயக்கன்பட்டி, செங்கோட்டை, புதுக்கோட்டை, மருதநத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சூரியகாந்தி, எண்ணைய் வித்து பயிரான எள் ஆகியவை மானாவாரியில் பயிரிட்டுள்ளனர். இதில், சாத்தூர்-65 மி.மீ, விருதுநகர்-53 மி.மீ, காரியாபட்டி-42 மி.மீ, சிவகாசி-21 மி.மீ, வெம்பக்கோட்டை-20.50 மி.மீ, ராஜபாளையம்-10 மி.மீ அளவும் பதிவாகியுள்ளது. இதில், சாத்தூர் பகுதியில் அதிகளவு மழை பதிவாகியுள்ளது. இம்மழைக்கு மானாவாரி பயிர்கள் செழிப்படைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பட்டாசு ஆலை சேதம்: இம்மழையால் பெரும்பாலன நகராட்சி பகுதி மற்றும் கிராமப்பகுதிகளில் மின்மாற்றிகள் செயலிழந்த காரணத்தால் மின்தடை ஏற்பட்டது. இத்தடை சனிக்கிழமை அதிகாலையில் பழுது நீக்கம் செய்யப்பட்டு மின்விநியோகம் செய்யப்பட்டது. இடி மின்னல் தாக்கியதால் தொலைக்காட்சி பெட்டிகள், கணிப்பொறிகள் ஆகியவைகளும் சேதமடைந்தன.
இதேபோல், விருதுநகர் அருகே கன்னிசேரி தனியார் பட்டாசு ஆலையில் இடிமின்னலுக்கு ஒரு அறை தரைமட்டமானாது. இரண்டு அறைகள் சுவரில் விரிசல் ஏற்பட்டிருந்தது. அதேபோல், ஒண்டிப்புலிநாயக்கனூரில் தனியார் பட்டாசு ஆலையில் இரண்டு அறைகள் சுவரில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்திருந்தது. எனவே இரவு நேரம் என்பதால் பட்டாசு இருப்பு அறை இடி மின்னுக்கு தப்பியதால் ஏற்பட இருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.