தற்போதைய செய்திகள்

பெல் நிறுவன மேலாளர் வீட்டில் 30 பவுன் நகை, பணம் திருட்டு

திருச்சி திருவெறும்பூர் அருகே பெல் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸôர் தேடிவருகின்றனர்.

சி.சண்முகவேல்

திருச்சி திருவெறும்பூர் அருகே பெல் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸôர் தேடிவருகின்றனர்.

திருவெறும்பூர் அருகேயுள்ள பிரகாஷ் நகர், 2-வது தெருவைச் சேர்ந்தவர் நா. இருசப்பன் (53). பெல் நிறுவனத்தில் தயாரிப்பு பிரிவில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.  கடந்த 7-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு திருச்செந்தூர் கோயிலுக்கு சென்ற இவர், சனிக்கிழமை அதிகாலை வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

இது குறித்து இருசப்பன் அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீஸôர் சம்பவ நடந்த வீட்டை பார்வையிட்டு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் அங்கு சென்று தடயங்களை பதிவு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT