விராலிமலை அருகே இருசக்கர வாகனம் மீது, அரசு பேருந்து மோதிய விபத்தில் கட்டட தொழிலாளி உள்பட 3 பேர் சாவு
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கட்டட தொழிலாளி, விவசாயி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கட்டட தொழிலாளி, விவசாயி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
மலைக்குடிபட்டிச் சேர்ந்த வீராச்சாமி மகன் செல்வம்(45) மணப்பாறை சிங்கு மகன் சுப்பிரமணி(40) இவர்கள் இருவரும் கட்டட தொழிலாளிகள், இவர்கள் விராலிமலை அருகே உள்ள அத்திப்பள்ளம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழவிற்கு சென்று கொண்டிருந்த வழியில் பேருந்துக்காக மலைக்குடிபட்டியில் நின்று கொண்டிருந்த மலைக்குடிபட்டி அருகே உள்ள புலவன்பட்டியைச் சேர்ந்த பழனிகுமரன் மகன் சின்னு(எ) சின்னையா(56) வை அடுத்த நிறுத்தத்தில் இறக்கி விடுவதாக கூறி இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்துள்ளனர். இலுப்பூர் அருகே உள்ள குளக்காரன்பட்டி பிரிவு சாலை அருகே இருசக்கர வாகனம் வந்த போது, மணப்பாறையில் இருந்து விராலிமலை வழியாக பட்டுக்கோட்டை சென்ற அரசு பேருந்து தனது கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியது இதில் செல்வம், சுப்பிரமணி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலந்த காயமடைந்த சின்னு(எ) சின்னையா மணப்பாறை மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுகுறித்து இலுப்பூர் காவல் ஆய்வாளர் எஸ். வேலுச்சாமி வழக்கு பதிந்து பேருந்து ஓட்டுநர் ஆலங்குடியைச் சேர்ந்த முணியாண்டி மகன் அய்யாவை(42) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.