முகப்பு
தற்போதைய செய்திகள்

விராலிமலையில் மனைவி பிரிந்த துக்கத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மனைவி பிரிந்த துக்கத்தில் இருந்த கணவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:32 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மனைவி பிரிந்த துக்கத்தில் இருந்த கணவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விராலிமலை அருகே உள்ள மேப்பூதகுடி குளவாய்பட்டியைச் சேர்ந்தவர் குமரன் மகன் மாரிமுத்து(55) விவசாயி இவருக்கு திருமணமாகி முதல் மனைவி இறந்துவிட்டார். இதனால் பானுமதி(40) என்பவரை இரண்டாவது  திருமணம் செய்துகொண்டார் இவர்களுக்கு 3 பெண், 1 ஆண் என 4 பேர் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவி பானுமதி, மாரிமுத்துவை விட்டு பிரிந்து வாழ்ந்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் மாரிமுத்து இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாரிமுத்து தனக்கு சொந்தமான குளவாய்பட்டி தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து விராலிமலை காவல் உதவி ஆய்வாளர் ந. புகழேந்தி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.