முகப்பு
தற்போதைய செய்திகள்

அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து: சேர்வலாறு, பாபநாசம் அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் பாபநாசம், சேர்வலாறு, வடக்குப்பச்சையாறு அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர்ந்துள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:34 AM
பகிர்:

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் பாபநாசம், சேர்வலாறு, வடக்குப்பச்சையாறு அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர்ந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதியில் நீடித்து வரும் வரும் மழையால் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

புதன்கிழமை காலை 8 மணிக்கு கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை:

பாபநாசம் அணை 6 மி.மீ, சேர்வலாறு அணை 3 மி.மீ, மணிமுத்தாறு அணை 1.2 மி.மீ, கடனாநதி அணை 2 மி.மீ, ராமநதி அணை 9 மி.மீ, குண்டாறு அணை 3.3 மி.மீ,

அடவிநயினார் அணை 4 மி.மீ, கொடுமுடியாறு அணை 25 மி.மீ. திருநெல்வேலி 10 மி.மீ, பாளையங்கோட்டை 3 மி.மீ, களக்காடு 7.4 மி.மீ, சேரன்மகாதேவி 3 மி.மீ, ராதாபுரம் 3 மி.மீ, நான்குனேரி 7 மி.மீ, தென்காசி 2 மி.மீ, ஆய்க்குடி 4 மி.மீ.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1892.47 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 2.35 அடி உயர்ந்து 75.95 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 91.70 அடியாகவும் இருந்தது.மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 205 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 84 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 57.40 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 42 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 44.65 அடியாகவும் இருந்தது.

வடக்குப் பச்சையாறு அணைக்கு விநாடிக்கு 210 கனஅடியாக அதிகரித்ததை அடுத்து அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 26 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 38.50 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 15.74 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.99 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 3.50 அடியாகவும் இருந்தது. கடனாநதி அணைக்கு விநாடிக்கு 38 கனஅடி, ராமநதி, அடவிநயினார் அணைகளின் நீர்வரத்து தலா 10 கனஅடியும் நீர்வரத்து உள்ளது. இந்த அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →