விராலிமலையில் சாலை விபத்தில் இறந்த அதிமுக நிர்வாகி குடும்பத்துக்கு 3 லட்சம் நிதி உதவி
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மலைக்குடிபட்டி அருகே கடந்த மே, 11-ம் தேதி இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பலியான அதிமுக கிளைகழக இணைச்செயலாளர் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் ரூ 3 லட்சம் நிதி உதவியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் புதன்கிழமை வழங்கினார்.

இலுப்பூர் அருகே உள்ள மலைக்குடிபட்டியைச் சேர்ந்தவர் விராச்சாமி மகன் செல்வம்(40) கட்டடத் தொழிலாளி அதிமுக கிளைகழக இணைச்செயலாளராகவும் உள்ளார்.
இந்நிலையில் கடந்த மே, 11-ம் தேதி மலைக்குடிபட்டி விராலிமலை சாலை குளக்காரன் பட்டி அருகே செல்வம் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மணப்பாறையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெ. ஜெயலலிதா இறந்த செல்வம் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் ரூ. 3 லட்சம் நிதி உதவி அறிவித்ததைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டச்செயலாளரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் புன்கிழமை வழங்கினார்.