முகப்பு
தற்போதைய செய்திகள்

மனைவி, மாமனார்-மாமியாரைத் தாக்கியவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவி மற்றும் அவரது பெற்றோரைத் தாக்கிய நபரை போலீஸார் கைது செய்தனர்.

தற்போதைய செய்திகள்

மனைவி, மாமனார்-மாமியாரைத் தாக்கியவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவி மற்றும் அவரது பெற்றோரைத் தாக்கிய நபரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:35 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவி மற்றும் அவரது பெற்றோரைத் தாக்கிய நபரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வன்னியம்பட்டி, வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் ரா.பேச்சிமுத்து. இவரது மனைவி சீதாலட்சுமி (25). இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியை சந்தேகப்பட்டு அடிப்பாராம். இந்நிலையில் வழக்கம்போல் வியாழக்கிழமை இரவு மது குடித்துவிட்டு வந்து சீதாலட்சுமியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அடித்துள்ளார்.

இதனால் அவர், குழந்தையுடன் பக்கத்துத் தெருவில் உள்ள பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டாராம். அங்கு சென்ற பேச்சிமுத்து, சீதாலட்சுமியை ஆபாசமாகப் பேசி அடித்துள்ளார்.

இதனைத் தட்டிக் கேட்ட இவரது பெற்றோரை மண்வெட்டி கொண்டு தாக்கி காயப்படுத்தியுள்ளார். இது குறித்து சீதாலட்சுமி வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →