முகப்பு
தற்போதைய செய்திகள்

விராலிமலை சுப்பிரமணியர் கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தெடங்கியது

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தெடங்கியது, திருவிழாவின் முக்கிய நிகழ்வான

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:35 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தெடங்கியது, திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஜீன், 1- ம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது

திருச்சியிலிருந்து 28 வது கிலோ மீட்டரில் அமைந்துள்ள விராலிமலை சுப்பிரமணியர் சுவாமி கோயில் புகழ்பெற்ற தலமாகும் வயலூரில் இருந்த அருணகிரிநாதரின் கனவில் முருகன் தோன்றி விராலிமலைக்கு வருமாறு பணிந்தார் பின்னர் காட்டுப்பகுதி வழியாக அருணகிரிநாதர் வந்த போது அவருக்கு ஏற்பட்ட பல்வேறு துயரங்களை நீக்கியதோடு, மலைமீது அருணகிரிநாதர் கண் முன்னே முருகன் தோன்றி அட்டமாசித்தி என்னும் எட்டு சித்திகளை வழங்கி அருளியதாலும், நாரதருக்கு சாபவிமோச்சனம் வழங்கிய இத்தலத்தில் தேசிய பறவையான மயில்கள் அதிகளவில் வசிப்பதாலும் இக்கோயில் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த மலைக்கோயிலுக்கு வெளியூர் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டு தோறும் வைகாசி விசாக திருவிழா இங்கு விமரிசையாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்காண திருவிழவின் தொடக்க நிகழ்வான கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்றது.

முன்னதாக சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு மற்றும் புதுப்பிக்கப்பட்ட கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திருவிழாவின் தொடர்ச்சியாக கொடியேற்றப்பட்ட நாளில் இருந்து காலை, மாலை இருவேளைகளில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை சமேதகராக மயில், பூதம், நாகம், சிம்மம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அதனைத்தொடர்ந்து 9- நாள் ஜீன், 1- ம் தேதி (திங்கள்கிழமை) விழாவின் முக்கிய நிகழ்வான ரதாரோகணம் எனும் தேரோட்டம் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. 10- ம் நாள் ஜீன், 2- ம் தேதி  இரவு தெப்பத்திருவிழாவும், 11-ம் நாள் விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது.

ஏற்பாடுகளை உதவி ஆணையர் கோ. ஜெயபிரியா, செயல் அலுவலர் ஆர். கருணாகரன், மேற்பார்வையாளர் ரெ. மாரிமுத்து, மண்டகப்படி, உபயதாரர்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.