தற்போதைய செய்திகள்

ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு: இணையதளத்தில் நுழைவுச் சீட்டுகளை பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம்

ஆய்வக உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்தவர்கள் தங்களகு நுழைவு சீட்டுக்களை 26-ம் தேதி முதல் இணையதளம் மூலம் பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம் என

எஸ். பாண்டியன்

ஆய்வக உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்தவர்கள் தங்களகு நுழைவு சீட்டுக்களை 26-ம் தேதி முதல் இணையதளம் மூலம் பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.   

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:

இம்மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 154 ஆய்வக உதவியாளர் பணிக்காலியிடம் உள்ளன. இப்பணிக்கு கடந்த ஏப்.24-ம் தேதி முதல், இம்மாதம் 6-ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடம் இருந்து பெறப்பட்டன. அதன் அடிப்படையில் இப்பணிக்காலியிடத்திற்கு மொத்தம் 41223 பேர் வரையில் விண்ணப்பித்துள்ளனர். மேலும், இப்பணிக்கான எழுத்துத் தேர்வு வருகிற 31-ம் தேதி நடைபெற இருக்கிறது. அதனால், இத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளோர் தங்களது நுழைவு சீட்டுக்களை 26-ம் தேதி முதல் www.tndge.in என்ற இணைய தளம் முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இம்மாவட்டத்தில் இத்தேர்வுக்காக 68 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கான தேர்வை நேர்மையான முறையிலும், வெளிப்படைத்தன்மையாகவும் நடத்தப்பட இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் அறைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படை அலுவலர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இப்பணிக்கான வினாத்தாள்கள் அனைத்தும் தயாராக உள்ளன. ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் ஒரு மணிநேரத்திற்கு முன்னதாக வாகனத்தில் ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்புடன் வினாத்தாள்களை விநியோகிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, இத்தேர்வுக்கான பணிகளில் கல்வித்துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT