தற்போதைய செய்திகள்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் அச்சங்கத்தின் அலுவலக வளாகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

எஸ். பாண்டியன்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் அச்சங்கத்தின் அலுவலக வளாகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமதாஸ் தலைமை வகித்தார். இச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் வேலை அறிக்கை சமர்பித்து பேசினார். கட்சியின் மாவட்ட செயலாளர் தி.ராமசாமி இன்றைய அரசியல் நிலவரம் குறித்து விளக்கவுரை நிகழ்த்தினார்.மேலும், இக்கூட்டத்தில் பிளவக்கல் அணையிலிருந்து அப்பகுதி விவசாயிகள் பயனடையும் வகையி்ல் உடனடியாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். வீட்டுமனை மற்றும் நிலமாற்றம் தொடர்பான பட்டாக்களை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாவட்டக்குழு கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர்கள் பால்ச்சாமி, குருசாமி, அய்யனார் மற்றும் அச்சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT