விராலிமலை அருகே சாலை விபத்து: ஒருவர் பலி, 2 பேர் பலத்த காயம்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை நான்கு வழிச்சாலையில் வெள்ளிக்கிழமை மாலை இரண்டு இருசக்கர...
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை நான்கு வழிச்சாலையில் வெள்ளிக்கிழமை மாலை இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது ஆம்னி பேரூந்து மோதிய விபத்தில், நெற்கருது அறுக்கும் வண்டி ஓட்டுநர் உயிரிழந்தார். மற்றோரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பலத்த காயங்களுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். (காயமடைந்தவர்கள் திருச்சி என்றும், பெயர் குறித்த விபரம் தெரியவில்லை)
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கணக்கம்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் சிவா(32) நெற்கருது அறுக்கும் வண்டி ஓட்டுநர். திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சிவா விராலிமலை பகுதியில் உள்ள வயல்களில் நெற்கருது அறுக்கும் பணியில் இருந்த போது மதியஉணவு வாங்குவதற்கு விராலிமலை- திருச்சி நான்கு வழிச்சாலையை சிவா கடக்க முயன்றுள்ளார் அப்போது மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேரூந்து தனது கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியே வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதியுள்ளது. இதில் காயமடைந்த சிவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றோரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பலத்த காயங்களுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.