முகப்பு
தற்போதைய செய்திகள்

வீரவநல்லூர் அருகே எஸ்.ஐ. விபத்தில் பலி

வீரவநல்லூர் அருகே சனிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வேலாயுதம் (57) சாலை விபத்தில் இறந்தார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

வீரவநல்லூர் அருகே சனிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வேலாயுதம் (57) சாலை விபத்தில் இறந்தார்.

முக்கூடல் அருகே பாப்பாக்குடியை சேர்ந்தவர் வேலாயுதம். இவர் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி செய்து வந்தார். சனிக்கிழமை இரவில் வெள்ளங்குளி, வெள்ளநீர் கால்வாய் பாலம் வரை மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டாராம். அப்போது, வெள்ளங்குளியில் கன்னடியன் கால்வாய் திருப்பத்தில் வந்தபோது, நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளிலிருந்து சாலையோர பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தாராம்.

வேலாயுதம் விபத்தில் சிக்கிய தகவல் காவல் நிலையத்தில் தெரியாத நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் தெரியவந்தது. பலத்த காயமடைந்த வேலாயுதம் சம்பவ இடத்திலே இறந்து கிடந்தார்.போலீஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வீரவநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →