முகப்பு
தற்போதைய செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் சூறைக் காற்று வீடுகள் சேதம்: முந்திரி, பலா, வாழை மரங்கள் சாய்ந்தன.

கடலூர் மாவட்டத்தில் மாவட்டத்தில் திங்கள்கிழமை மழையுடன் வீசிய பலத்த சூறைக் காற்றால் ஏராளமான வீடுகளின் மேற்கூரைகள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்து  சேதமடைந்தன.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:30 AM
பகிர்:

கடலூர் மாவட்டத்தில் மாவட்டத்தில் திங்கள்கிழமை மழையுடன் வீசிய பலத்த சூறைக் காற்றால் ஏராளமான வீடுகளின் மேற்கூரைகள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்து  சேதமடைந்தன.

கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் பரவலாக  மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சனிக்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை காலை மழையுடன் பலத்த சூறைக்காற்றும் வீசுகிறது.

இதனால், கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் முந்திரி, பலா, மா, வாழை மரங்கள் சாய்ந்துள்ளன.

பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததில் மின் கம்பிகள் அறுந்து கிடந்தது. சில இடங்களில் மின் கம்பங்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பண்ருட்டி அடுத்த சேமக்கோட்டையில் புளியம் மரம் குடியில் சாய்ந்ததில் 3 ஆடுகள் இறந்ததாக தெரிய வருகிறது. சாலையில் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து தடைபட்டது,

சூறை காற்றின் காரணமாக அங்காங்கே வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள் காற்றில் பறந்தன. வீடு மற்றும் கடைகளில் போடப்பட்டிருந்த தகுடு ஓடுகளும் பறந்தன.

பண்ருட்டி ஒன்றிய பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விதைக்கப்பட்டிருந்த உளுந்து தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.

2011 டிசம்பர் மாதம் வீசிய தானே புயலால் கடலூர் மாவட்டம் பலத்த சேதம் அடைந்தது. அதன் வேதனையில் இருந்து மீண்டு அதன் சுவடுகள் மெல்ல மறைந்து வரும் நிலையில் தற்போது வீசும் சூறைக்காற்று முந்திரி, பலா விவசாயிகளை கலக்கம் அடைய வைத்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, கடலூர் உள்ளிட்ட இடங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முற்றிலும் சேதம் அடைத்ததாக கூறப்படுகிறது.

தாழ்வானப்பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் நகரம் மற்றும் கிராமப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

எனவே, மாவட்ட நிர்வாகம் போக்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காற்றினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →