முகப்பு
தற்போதைய செய்திகள்

108 ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை!

அன்னவாசல் அருகே மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் 108 ஆம்புலன்ஸில் ஆண் குழந்தை பிறந்தது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:33 AM
பகிர்:

அன்னவாசல் அருகே மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் 108 ஆம்புலன்ஸில் ஆண் குழந்தை பிறந்தது.

முக்கண்ணாமலைப்பட்டியைச் சேர்ந்தவர்  முபாரக் இவரது மனைவி சபியாபேகம்(26) கர்ப்பிணியாக இருந்த இவருக்கு திங்கள்கிழமை பிரசவவலி அதிகரித்ததால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர் புதுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

அப்போது பெருச்சுனை அருகே ஆம்புலன்ஸிலேயே சபியாபேகத்திற்கு ஆண் குழந்தை பிறந்தது. 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் திவ்யா, ஓட்டுநர் ராம்கி ஆகியோர் உதவி செய்து குழந்தையுடன், சபியாபேகத்தை புதுகை அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர்.

மருத்துவமனையில் தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.